மூன்றாம் திருப்புதல் மாதிரி வினாத்தாள்
2021-2022
பத்தாம் வகுப்பு
மொழிப்பாடம் – தமிழ்
விடைக்குறிப்பு
நேரம்
: 15 நிமிடம் + 1.30 மணி மதிப்பெண்
: 50
அறிவுரைகள்
: 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக்
கொள்ளவும்.அச்சுப்பதிவில்
குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
2) நீலம்
அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்தவும்.
குறிப்பு
: I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.
ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும்
சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி – I ( மதிப்பெண்கள் : 5 )
i)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்கவும்
ii)
கொடுக்கப்பட்ட
நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து
எழுதவும்.
5×1=5
1.திருநெல்வேலி
ஊர்பெயரின் மரூஉ_________________
அ)
நெய்வேலி ஆ) நெல்லை இ) வேலூர் ஈ) திருநெல்லை
2.
போதி தர்மர் உருவாக்கிய தத்துவம் ______________
அ)
சமணம் ஆ) கிரேக்கம் இ) புத்தம் ஈ) ஜென்
3.’
மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’- மாலவன் குன்றமும்,
வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே
அ)
திருத்தணியும்,திருப்பதியும் ஆ) திருப்பரங்குன்றமும்
பழனியும்
இ) திருப்பதியும் திருத்தணியும் ஈ) திருப்பதியும் திருச்செந்தூரும்
4.
கருணையன் என்பவர் _____________
அ)
வீரமாமுனிவர் ஆ) யோசேப்பு இ) அருளப்பன் ஈ) சாந்தா சாகிப்
5.
‘ எய்துவர் எய்தாப் பழி’ – இக்குறளடிக்கு பொருந்தும் வாய்பாடு எது?
அ) கூவிளம் தேமா மலர் ஆ) கூவிளம் புளிமா நாள் இ)
தேமா புளிமா காசு
ஈ)
புளிமா தேமா பிறப்பு
பகுதி – II ( மதிப்பெண்கள் : 14 )
பிரிவு – 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் குறுகிய விடையளிக்க.
4×2=8
11 ஆவது வினாவிற்கு கட்டாயமாக
விடையளிக்க வேண்டும்.
6. ‘ காய்மணி யாகு முன்னர்க்
காய்ந்தெனக் காய்ந்தேன் ‘ – உவமை உணர்த்தும் கருத்து யாது?
தாயை இழந்து வாடுகிறேன் என்பது உவமை உணர்த்தும் கருத்து.
7. விடைக்கேற்ற வினா அமைக்க.
அ. பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பதே
சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும்,சவாலும் என
ஜெயகாந்தன் கருதினார்.
பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பதே
சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும்,சவாலும் என கருதியது யார்?
ஆ. இந்திய விடுதலைப் போராட்ட
வரலாற்றில் 1906ஆம் ஆண்டு மிகவும் சிறப்புடைய ஆண்டாக
கருதப்படுகிறது.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் எந்த ஆண்டு மிகவும் சிறப்புடைய ஆண்டாக
கருதப்படுகிறது?
8. மெய்க்கீர்த்தி பாடுவதன் நோக்கம் யாது?
அரசர்கள் தங்கள் வரலாறும்
பெருமையும் காலம் கடந்தும் நிலைத்து நிற்க கல்லிலும் செப்பேட்டிலும் மெய்கீர்த்தி எழுதினார்கள்
9. பகுபத உறுப்பிலக்கணம் தருக:-
அறியேன்
அறியேன் – அறி + ய் + ஆ + ஏன்
அறி – பகுதி
ய்
- சந்தி
ஆ – எதிர் மறை இடைநிலை புணர்ந்து கெட்டது
ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
10. பாசவர்,வாசவர்,பல்நிண விலைஞர்,உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள்
யாவர்?
·
பாசவர் – வெற்றிலை விற்போர்
·
வாசவர் – நறுமணப் பொருள் விற்போர்
·
பல்நிண வினைஞர் – இறைச்சிகளை விற்பவர்
·
உமணர் – உப்பு விற்பவர்
11. ‘ மாற்றம் ‘ – எனத் தொடங்கி ‘ சாலை ‘ என முடியும் காலக்கணித பாடலை எழுதுக.
மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்1
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!
பிரிவு – 2
எவையேனும் மூன்று வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்கவும். 3×2=6
12. மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக:-
அ. மனக்கோட்டை
தேர்தலில் கண்ணன் போட்டியிட்டு நாளையே முதலமைச்சராகி விடலாம்
என மனக்கோட்டை கட்டுகிறான்.
ஆ. ஆறப்போடுதல்.
கண்ணன் எந்த ஒரு பிரச்சனையையும் கோபத்தை ஆறபோட்டப்பின் தீர்வு காண வேண்டும்.
13. பொருத்தமான நிறுத்தற்க்
குறியிடுக:-
சேர்ரகளின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை
குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை
வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில்
சான்றுகள் உள்ளன
சேரர்களின் பட்டப் பெயர்களில் ‘ கொல்லி வெற்பன் ‘, ‘மலையமான்’
போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன், ‘ கொல்லி வெற்பன் ‘ எனவும் பிற
மலைப்பகுதிகளை வென்றவர்கள் ‘ மலையமான் ‘ எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச்
சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன,
14. குறள் வெண்பாவின் இலக்கணத்தை
எழுதுக.
Ø
வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகள் கொண்டது குறள்
வெண்பா.
Ø
எ.கா: எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
15. பேச்சு வழக்கினை எழுத்து
வழக்காக மாற்றுக.
“ தம்பீ? எங்க நிக்கிறே?”
“ நீங்க சொன்ன எடத்துலதாண்ணே! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது”.
“ அங்ஙனக்குள்ளே டீ சாப்ட்டுட்டு,பேப்பரப் படிச்சிக்கிட்டு இரு..நா
வெரசா வந்துருவேன்”.
“ தம்பி ? எங்கே நிற்கிறாய்?”
“ நீங்கள் கூறிய இடத்தில் தான் அண்ணா! எதிர்ப்புறம்
தேநீர் கடை இருக்கிறது “.
“ அங்கேயே தேநீஎ அருந்திக்கொண்டு, செய்தித்தாளினை
வாசித்துக் கொண்டு இரு. நான்
விரைவாக வந்துவிடுவேன்”.
16. கலைச்சொல் தருக:-
அ. Patent - காப்புரிமை ஆ) Renaissance – மறுமலர்ச்சி
பகுதி – III ( மதிப்பெண்கள் -9 )
எவையேனும் மூன்று வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க:- 3×3=9
20 ஆவது வினாவிற்கு கட்டாயம்
விடையளிக்க வேண்டும்
17. ஜெயகாந்தன்
தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோக
மித்திரன்
கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் “ தர்க்கத்திற்கு அப்பால் “ கதை
மாந்தர்
வாயிலாக விளக்குக.
Ø
பார்வையற்றவருக்கு இரண்டனா இடுதல்.
Ø
பார்வையற்றவர் போகிற வழியெல்லாம் புண்ணியம்
என வாழ்த்துக் கூறல்.
Ø
தர்மம் செய்ததால் இரயில் விபத்திலிருந்து தப்பித்தல்.
18. “ கவிஞன் யானோர் காலக்
கணிதம்” – எனத் தொடங்கும் கவிஞர் கண்ணதாசனின்
கவிதையில் உங்களை கவர்ந்த மூன்று தொடர்களை எழுதி காரணத்தைக் குறிப்பிடுக.
மாணவர்கள் காலக்கணிதம் பாடல் வரிகளில் ஏதேனும் மூன்று வரிகள்
எழுதி அதற்கான காரணமும் ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில் மதிப்பெண் வழங்கவும்.
19. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல்
ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு – இக்குறட்பாவினை அலகிட்டு
வாய்பாடு காண்க.
வ.எண் |
சீர் |
அசை |
வாய்பாடு |
1 |
வன் -கண் |
நேர் - நேர் |
தேமா |
2 |
குடி – காத் -தல் |
நிரை-நேர்-நேர் |
புளிமாங்காய் |
3 |
கற் – றறி- தல் |
நேர் – நிரை - நேர் |
கூவிளங்காய் |
4 |
ஆள் -வினை-யோ |
நேர் – நிரை - நேர் |
கூவிளங்காய் |
5 |
டைந்-துடன் |
நேர் - நிரை |
கூவிளம் |
6 |
மாண்-ட |
நேர் - நேர் |
தேமா |
7 |
தமைச்சு |
நிரைபு |
பிறப்பு |
20. “ நவமணி வடக்க “ எனத் தொடங்கும்
தேம்பாவணி பாடலை எழுதுக.
நவமணி வடக்க யில்போல்
நல்லறப் படலைப் பூட்டும்
தவமணி மார்பன் சொன்ன
தன்னிசைக்கு இசைகள் பாடத்
துவமணி மரங்கள் தோறும்
துணர்அணிச் சுனைகள் தோறும்
உவமணி கானம்கொல் என்று
ஒலித்து அழுவ போன்றே
- வீரமாமுனிவர்
(அல்லது )
“ தூசும் துகிரும் “ எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுதுக.
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும்
பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்;
- இளங்கோவடிகள்
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 10)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.
2×5=10
21. அ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க
வணிக வீதீகளை இக்கால வணிக வளாகங்களோடும்
அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
மருவூர்ப்பாக்க வணிக வீதி |
இக்கால வணிக வளாகங்கள் |
தானியக் கடைத் தெருக்கள் |
தனித்தனி அங்காடிகள் |
நேரடி வணிகம் |
இடைத் தரகர்கள் அதிகம் |
இலாப நோக்கமற்றது |
இலாபம் மட்டுமே முக்கியம் |
கலப்படம் இல்லாதது |
கலப்படம் கலந்துள்ளது |
தரம் உண்டு.விலை குறைவு |
விலை அதிகம் |
( அல்லது )
ஆ) உங்கள் தெருவில் மின் விளக்குகள்
பழுதடைந்துள்ளன அதனால் இரவில் சாலையில் நடந்து
செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன
செய்யும்படி மின்வாரிய அலுவலருக்கு கடிதம்
எழுதுக.
அனுப்புநர்
அ அ அ
அ அ,
100,பாரதி தெரு,
சக்தி நகர்,
சேலம் – 636006.
பெறுநர்
மின்வாரிய அலுவலர் அவர்கள்,
மின்வாரிய அலுவலகம்,
சேலம் – 636001.
ஐயா,
பொருள்: மின்விளக்கு சரி செய்ய வேண்டுதல் – சார்பு
வணக்கம். எங்கள் தெருவில் 100 குடும்பங்கள் உள்ளன. எங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு பல்வேறு இடையூறுகள்
ஏற்படுகின்றன. எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சரி செய்து கொடுக்க வேண்டுமாய்
தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
இடம் : சேலம் இப்படிக்கு,
நாள் : 04-03-2021 தங்கள்
உண்மையுள்ள, அ அ அ
அ அ.
உறை மேல் முகவரி:
பெறுநர்
மின்வாரிய அலுவலர் அவர்கள்,
மின்வாரிய அலுவலகம்,
, சேலம் – 636006
22. அ) படம் உணர்த்தும் கருத்தை
கவினுற எழுதுக.
ஏடு எடுத்தேன் கவி ஒன்று
எழுத
என்னை எழுது என்று சொன்னது
இந்தக் காட்சி
கொடுப்பவன் என் கொடையைப்
பற்றி எழுது என்றான்
பெறுபவன் என் வறுமையைப்
பற்றி எழுது என்றான்
நான் எழுதுகிறேன் கொடையை
தடுக்காதே என்று
( அல்லது )
ஆ) சேலம் மாவட்டம்,வ.உ.சி.நகர்,
காந்தித் தெரு,கதவிலக்க எண்50 இல் வசிக்கும்
மதியழகன் மகள் தமிழினியாள் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று தற்போது அரசு
மேல்நிலைப் பள்ளியில் கணிதப் பாடப்பிரிவில் தமிழ் வழியில் சேரவிருக்கிறார். அவரின்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வர் தம்மை தமிழினியாளாக
நினைத்து உரியப் படிவத்தை நிரப்புக..
பெயர் |
தமிழினியாள் |
தேர்வெண் |
15016032 |
தமிழ் |
92 |
ஆங்கிலம் |
89 |
கணிதம் |
100 |
அறிவியல் |
75 |
சமூக அறிவியல் |
88 |
பகுதி – v ( மதிப்பெண்கள் : 12 )
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக
விடையளிக்க. 2×6=12
43. அ) நாட்டு விழாக்கள் –
விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில்
மாணவர் பங்கு.
குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் ‘ மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்’ என்ற
தலைப்பில்
மேடை உரை எழுதுக.
குறிப்புச் சட்டகம் |
Ø
முன்னுரை |
Ø
நாட்டு விழாக்கள் |
Ø
விடுதலைப் போராட்ட வரலாறு |
Ø
நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு |
Ø
முடிவுரை |
முன்னுரை:
மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் பற்றி இக் கட்டுரையில்
காணலாம்.
நாட்டு விழாக்கள்:
சுதந்திர தினம், குடியரசு தினம், காந்திஜெயந்தி, தேசிய
ஒருமைப்பாடு தினம், ஆகிய நாட்களில் மாணவர்கள் ஒற்றுமையோடு கொண்டாடி நாட்டிற்கு
பெருமை சேர்க்கின்றனர்.
விடுதலைப் போராட்ட வரலாறு:
வெள்ளையனே வெளியேறு,உப்பு சத்தியாகிரகம் போன்ற போராட்டங்கள் மூலம் பெற்ற விடுதலையை எண்ணி போற்ற
வேண்டும்.
நாட்டின் முன்னேற்றத்தில்
மாணவர்பங்கு:
மாணவர்கள் கல்வி பயில்வதோடு பள்ளியில் செயல்படும் சாரணர்
இயக்கம்,இளஞ்செஞ்சிலுவை சங்கம்,NSS,NCC
போன்ற இயக்கங்களில் இணைந்து சுதந்திர இந்தியாவை காப்பாற்றும்
பொறுப்பு அறிந்து செயல் பட வேண்டும்.
முடிவுரை:
நாட்டினை உயர்த்துவேன்,தலை நிமிர்ந்து வாழ்வேன் என்ற உறுதியான மனநிறைவோடு வாழ்ந்திடுவோம்.
( அல்லது )
ஆ) சங்க இலக்கியங்களில் காணப்படும் ஐந்து அறக்கருத்துகளைத்
தொகுத்து, அவை இன்றும் தேவையே
என்பதனை நிறுவுக.
குறிப்புச் சட்டகம் இட்டு,
உட்தலைப்புகள் இட்டு ஏற்புடைய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
44. அ) ‘ ஒருவன் இருக்கிறான்
‘ என்ற கதைப் பகுதியைச் சுருக்கமாக எழுதுக.
ஒருவன் இருக்கிறான்
-கு.அழகிரிசாமி
குறிப்புச் சட்டகம் |
முன்னுரை |
குப்புசாமி |
பக்கத்து வீட்டுக்காரர் |
முடிவுரை |
முன்னுரை:
கல்மனதையும்
கரைய வைக்கும் கதை இந்த ஒருவன இருக்கிறான். இதை இக்கட்டுரையில் காண்போம்.
குப்புசாமி:
Ø
குப்புசாமி 25 வயது வாலிபன்.வயிற்று வலிக்காரன்
Ø
உறவினர்கள் இவனை அனாதைப் போல நடத்தினார்கள்.
Ø
காரணமில்லாமல் பக்கத்து வீட்டுக்காரரால் வெறுக்கப்பட்டான்
குப்புசாமி.
Ø
வயிற்றுவலிக்கு மருத்துவம் பார்க்க சென்னை வந்தவன் இந்த குப்புசாமி.
பக்கத்து வீட்டுக்காரர்:
Ø
பக்கத்து வீட்டுக்காரர் காரணமில்லாமல் வெறுப்பை அவன் மீது
காட்டியவர். அவரின் மனைவி கருணையோடு இருந்தவர்.
Ø
குப்புசாமிக்கு ஆறுமுகம் மூலம் கடிதம் வந்தது. ஆறுமுகமும் தன் பங்காக இரு சாத்துகுடியும்,ஒரு ரூபாய் பணமும் கொடுத்தார்.
Ø
பக்கத்து வீட்டுக்காரர் குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான்
என்பதை வீரப்பனின் கடிதம் மூலம் அறிந்தார். கடன் வாங்கி கொடுத்த அந்த மூன்று ரூபாயும் அவரின் மனதை மாற்றியது.
Ø
மனைவியை உடன் அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல சாத்துக்குடி
வாங்க சென்றார்.
முடிவுரை:
எல்லோருக்கும்
ஒருவன் இருக்கிறான் யாரும் அனாதை இல்லை என்பதை இக்கட்டுரையின் மூலம் காணும் போது மனிதம்
துளிர்க்கிறது எனபதனை அறிய முடிகிறது.
( அல்லது )
ஆ) குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம்
எழுதுக.
மாணவன் – கொக்கைப் போல,கோழியைப் போல-உப்பைப் போல – இருக்க வேண்டும்.
கொக்கு
காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் –
குப்பையைக் கிளறினாலும் தனது
உணவை மட்டுமே எடுத்துக் கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும்,
உப்பின்
சுவையை உணர முடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் – மகிழ்ச்சி.
நாடகப் பாங்கில் குறிப்புகளைக் கொண்டு ஏற்புடைய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம்.
CLICK HERE TO DOWNLOAD PDF
வினாத்தாள் வடிவமைப்பு.