10TH - TAMIL - 3RD REVISION - 50 MARK QUESTION


மூன்றாம் திருப்புதல் மாதிரி வினாத்தாள் 2021-2022

பத்தாம் வகுப்பு

மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 1.30 மணி                                                             மதிப்பெண் : 50

அறிவுரைகள் : 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும்.

                    அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்     பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

          ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

பகுதி – I ( மதிப்பெண்கள் : 5 )

i)             அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

ii)             கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

5×1=5

1.திருநெல்வேலி ஊர்பெயரின் மரூஉ_________________

அ) நெய்வேலி             ஆ) நெல்லை              இ) வேலூர்                ஈ) திருநெல்லை

2. போதி தர்மர் உருவாக்கிய தத்துவம் ______________

அ) சமணம்                ஆ) கிரேக்கம்                        இ) புத்தம்        ஈ) ஜென்

3.’ மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’- மாலவன் குன்றமும், வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே

அ) திருத்தணியும்,திருப்பதியும்   ஆ) திருப்பரங்குன்றமும் பழனியும்

இ) திருப்பதியும் திருத்தணியும்  ஈ) திருப்பதியும் திருச்செந்தூரும்

4. கருணையன் என்பவர் _____________

அ) வீரமாமுனிவர்        ஆ) யோசேப்பு            இ) அருளப்பன்            ஈ) சாந்தா சாகிப்

5. ‘ எய்துவர் எய்தாப் பழி’ – இக்குறளடிக்கு பொருந்தும் வாய்பாடு எது?

அ) கூவிளம் தேமா மலர்                    ஆ) கூவிளம் புளிமா நாள்                  இ) தேமா புளிமா காசு    

ஈ) புளிமா தேமா பிறப்பு

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 )

பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                        4×2=8

11 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

6. ‘ காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் ‘ – உவமை உணர்த்தும் கருத்து யாது?.

7. விடைக்கேற்ற வினா அமைக்க.

          அ. பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பதே சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும்,சவாலும் என

              ஜெயகாந்தன் கருதினார்.

          ஆ. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1906ஆம் ஆண்டு மிகவும் சிறப்புடைய ஆண்டாக

    கருதப்படுகிறது.

8. மெய்க்கீர்த்தி பாடுவதன் நோக்கம் யாது?

9. பகுபத உறுப்பிலக்கணம் தருக:- அறியேன்.

10. பாசவர்,வாசவர்,பல்நிண விலைஞர்,உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

11. ‘ மாற்றம் ‘ – எனத் தொடங்கி ‘ சாலை ‘ என முடியும் காலக்கணித பாடலை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும்  மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                              3×2=6

12. மரபுத் தொடருக்கான பொருளறிந்து  தொடரில் அமைத்து எழுதுக:-

அ. மனக்கோட்டை                 ஆ. ஆறப்போடுதல்.

13. பொருத்தமான நிறுத்தற்க் குறியிடுக:-

சேர்ரகளின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன

14. குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதுக.

15. பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.

          “ தம்பீ? எங்க நிக்கிறே?”

          “ நீங்க சொன்ன எடத்துலதாண்ணே! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது”.

          “ அங்ஙனக்குள்ளே டீ சாப்ட்டுட்டு,பேப்பரப் படிச்சிக்கிட்டு இரு..நா வெரசா வந்துருவேன்”.

16. கலைச்சொல் தருக:-

          அ. Patent                                      ஆ) Renaissance

பகுதி – III ( மதிப்பெண்கள் -9 )

எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                                  3×3=9

20 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

17. ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோக

     மித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத்தர்க்கத்திற்கு அப்பால்கதை மாந்தர்   

     வாயிலாக விளக்குக

18. “ கவிஞன் யானோர் காலக் கணிதம்” – எனத் தொடங்கும் கவிஞர்  கண்ணதாசனின் கவிதையில் உங்களை கவர்ந்த மூன்று தொடர்களை எழுதி காரணத்தைக் குறிப்பிடுக.

19. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ

      டைந்துடன் மாண்ட தமைச்சு – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.

20. “ நவமணி வடக்க “ எனத் தொடங்கும் தேம்பாவணி பாடலை எழுதுக

(அல்லது )

          “ தூசும் துகிரும் “ எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுதுக.

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 10)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                                            2×5=10

21. அ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதீகளை இக்கால வணிக வளாகங்களோடும்

             அங்காடிகளோடும் ஒப்பிட்டு  எழுதுக.

( அல்லது )

      ஆ) ) உங்கள் தெருவில் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன அதனால் இரவில் சாலையில் நடந்து

        செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்கு கடிதம்    எழுதுக.

22. அ) படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.


( அல்லது )

ஆ) சேலம் மாவட்டம்,வ.உ.சி.நகர், காந்தித் தெரு,கதவிலக்க எண்50 இல் வசிக்கும்  மதியழகன் மகள் தமிழினியாள் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று தற்போது அரசு மேல்நிலைப் பள்ளியில் கணிதப் பாடப்பிரிவில் தமிழ் வழியில் சேரவிருக்கிறார். அவரின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு  மதிப்பெண் பட்டியல்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வர் தம்மை தமிழினியாளாக நினைத்து உரியப் படிவத்தை நிரப்புக..

பெயர்

தமிழினியாள்

தேர்வெண்

15016032

தமிழ்

92

ஆங்கிலம்

89

கணிதம்

100

அறிவியல்

75

சமூக அறிவியல்

88

 

பகுதி – v ( மதிப்பெண்கள் : 12 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                                     2×6=12

23. அ) நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின்  முன்னேற்றத்தில் மாணவர் பங்கு. குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில்  ‘ மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்’ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

( அல்லது )

    ஆ) சங்க இலக்கியங்களில் காணப்படும் ஐந்து அறக்கருத்துகளைத் தொகுத்து, அவை இன்றும் தேவையே என்பதனை நிறுவுக.

24. அ) ஒருவன் இருக்கிறான் என்ற கதையை சுருக்கி ஒரு பக்க அளவில் எழுதுக.

( அல்லது )

     ஆ) குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.

          மாணவன் – கொக்கைப் போல,கோழியைப் போல-உப்பைப் போல – இருக்க வேண்டும். கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக் கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், உப்பின் சுவையை உணர முடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் – மகிழ்ச்சி.

         

வினாத்தாள் வடிவமைப்பு.

WWW.TAMILVITHAI.COM

WWW.KALVIVITHAIGAL.COM

 CLICK HERE TO DOWNLOAD PDF


நீங்கள் 20 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post