மெல்லக் கற்கும் மாணவர்களை மனதில் கொண்டு தொகுக்கப்பட்ட இரண்டு மதிப்பெண் வினாக்கள் தொகுப்பு .ஆசிரியர்கள் தமது வகுப்பில் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு இதனை நகல் எடுத்து பயிற்சி வழங்கவும். மேலும் தங்களுக்கு எந்த மாதிரியான பயிற்சித்தாள் தேவை என்பதனை இந்த வலைதளத்தின் கருத்துப் பெட்டியில் பதிவிடவும். அல்லது 8695617154 என்ற புலன எண்ணிற்கு தெரிவிக்கவும். 30 நாட்கள் மட்டுமே பொதுத் தேர்வுக்கு உள்ளமையால் உங்கள் கருத்துகள் அதி முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே ஆசிரியர்கள் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு எவ்வகையான பயிற்சிக் கொடுத்தால் அவர்களும் தேர்வில் தேர்ச்சி அடைவர் என்ற நோக்கத்தை நாம் அனைவரும் அடைய முடியும். எனவே உங்களின் கருத்துகளை எதிர்நோக்கி காத்து இருக்கும் உங்கள் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள்.
10th --TAMIL -REDUSED SYLLABUS - WORKSHEET
-2021 -2022
குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திற்கான
குறுவினாக்கள் வினாக்கள்
பத்தாம் வகுப்பு – தமிழ்
இயல் -1
குறுவினாக்கள்
அ) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-
1. வேங்கை - என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக்
காட்டுக.
2. மன்னும் சிலம்பே!மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! – இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்ப்பியங்களின்
பெயர்களை எழுதுக.
3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி,எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.
4. உடுப்பத்தூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண் வற்றாகும் கீழ் – இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி,அதன் இலக்கணம் தருக.
இயல் -2
1. நமக்கு உயிர் காற்று
காற்றுக்கு வரம் மரம் – மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம் – இது போன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான
இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.
2. வசன கவிதை – குறிப்பு வரைக.
3. தண்ணீர் குடி,தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க.
இயல் -3
1. “எழுது என்றாள் “ என்பது விரைவு
காரணமாக “ எழுது எழுது என்றாள் “ என அடுக்குத்
தொடரானது.”சிரித்துப் பேசினார்” என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?
2. பாரதியார் கவிஞர்,நூலகம் சென்றார்,அவர் யார்? – ஆகிய தொடர்களில்
எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?
இயல் -3
திருக்குறள்
1. “ நச்சப் படாதவன்” செல்வம் – இத்தொடரில் தடித்த சொல்லுக்குப் பொருள் தருக.
2. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல் – இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.
இயல் – 4
1. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்
மொழிக்குச் செல்கிறேன் – இத்தொடர் கால வழுவமைதிக்கு
எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
2. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
3. “ சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினான். – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.
இயல் – 5
1.செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக:-
2. தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினைக் குறிப்பிட்டுக்
காரணம் எழுதுக.
3. இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின்
சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?
இதோ...இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா?இல்லையா?
மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.
இயல் – 6
1. காட்டில் விளைந்த
வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற் பொருள்,கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.
2. “நேற்று நான் பார்த்த அருச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த
நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்!” என்று சேகர் என்னிடம் கூறினான். இக்கூற்றை அயற்கூற்றாக
எழுதுக
3. உறங்குகின்ற கும்பகன்ன’ எழுந்திராய் எழுந்திராய்’
காலதூதர் கையிலே ‘ உறங்குவாய் உறங்குவாய் ‘
கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
இயல் – 6
திருக்குறள்
1. கரப்பிடும்பை இல்லார் – இத்தொடரின் பொருள்
கூறுக
2. தஞ்சம் எளியர் பகைக்கு – இவ்வடிக்குரிய
அசைகளையும் வாய்பாடுகளையும் எழுதுக.
3. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக்
குறிளின் கருத்து என்ன?
4. பின் வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.
பெரிய கத்தி, இரும்பு ஈட்டி, உழைத்தால் கிடைத்த
ஊதியம், வில்லும் அம்பும்
இயல் – 7
1. பாசவர்,வாசவர்,பல்நிண விலைஞர்,உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
2. மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?
3. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.
4. புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
5. பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.
பழங்காலத்தில் பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட
சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு
அடிமைப் பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு
அழைப்பு விடுத்திருந்தேன். –ம.பொ.சி
இயல் – 8
1. ‘ கொள்வோர் கொள்க;குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது’
அ) அடியெதுகையை எடுத்தெழுதுக..
2. குறள் வெண்பாவின் இலக்கணம் எழுதி எடுத்துக்காட்டுத் தருக.
3. குறிப்பு வரைக:- அவையம்
4. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.
இயல் – 9
1. தீவக அணிகளின் வகைகள் யாவை?
2. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு – இத்தொடரை இரு தொடர்களாக்குக.
3. “ காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் “ – உவமை உணர்த்தும் கருத்து யாது?
4. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. – இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?
CLICK HERE DOWNLOAD BUTTON TO GET PDF FILE
Very useful
ReplyDelete