10TH - PUBLIC MODEL QUESTION - PDF

 

ஆண்டு பொதுத் தேர்வு -மாதிரி வினாத்தாள்

    10.ஆம் வகுப்பு                                        தமிழ்                                     100 மதிப்பெண்கள்

பகுதி-1(மதிப்பெண்கள்:15)

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:                                                                              

1) எந்தமிழ்நா  என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்____________

) எந் + தமிழ் + நா       ) எந்த + தமிழ் + நா     ) எம் + தமிழ் + நா        ) எந்தம் + தமிழ் + நா

2)அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது

அ) வேற்றுமை உருபு   ஆ) எழுவாய்  இ) உவம உருபு  ஈ) உரிச்சொல்

3)குலசேகராழ்வாரின் காலம் கி.பி. -----நூற்றாண்டு

) ஆறாம்  ஆ)ஏழாம்    இ)எட்டாம்    ஈ)ஐந்தாம்

4)அருந்துணை என்பதைப் பிரித்தால்-------------என வரும்

அ)அரு+துணை  ஆ)அருமை+துணை   இ)அருமை+இணை   ஈ)அரு+இணை

5)மனைக்கிணறு எந்நிலத்திற்குரிய நீர்?

அ)குறிஞ்சி   ஆ)முல்லை    இ)மருதம்    ஈ)பாலை

6) -----------காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன.

அ)இராசேந்திரன்    ஆ)பாண்டியன்    இ) முதலாம் இராசராசன்     ஈ)சேரலாதன்

7) புதிரை விடுவிக்க :- பழமைக்கு எதிரானது. எழுதுகோலில் பயன்படும்

அ) நறுமணம்   ஆ) புதுமை  இ) வாய்மை   ஈ) நேர்மை

8)ஏன் தாமதமாக வந்தாய்? என்ற வினாவிற்குப் பேருந்தைத் தவறவிட்டேன் என்பது----விடை

அ)ஏவல்   ஆ)உறுவது கூறல்    இ) உற்றது உரைத்தல்   ஈ) இனமொழி 

9) உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்

அ) உதியன்; சேரலாதன் ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்

இ) பேகன்; கிள்ளிவளவன் ஈ) நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி

10)கோசல நாட்டில் கொடையில்லாத காரணம் என்ன?

அ)நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்ஆ)ஊரில் விளைச்சல் இல்லாததால்

இ)அரசன் கொடுங்கோலாட்சி புரிவதால் ஈ)அங்கு வறுமை இல்லாததால்

11. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ........................................ வேண்டினார்.

அ)கருணையன், எலிசபெத்துக்காக ஆ)எலிசபெத், தமக்காக

இ) கருணையன், பூக்களுக்காக ஈ) எலிசபெத், பூமிக்காக

பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:

      வாய்மணி யாகக் கூறும் வாய்மையே மழைநீ ராகித்

      தாய்மணி யாக மார்பில் தயங்கியுள் குளிர வாழ்ந்தேன்

      தூய்மணி யாகத் தூவும் துளியிலது இளங்கூழ் வாடிக்

      காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் அந்தோ.

12)இப்பாடல் இடம்பெற்ற நூல் யாது?

அ. இயேசு காவியம் ஆ. கம்பராமாயணம் இ. தேம்பாவணி ஈ. நீதி வெண்பா

13) இப்பாடலை இயற்றியவர் யார்?

அ. குலசேகர ஆழ்வார் ஆ. இளங்கோவடிகள் இ. வீரமாமுனிவர்  ஈ. கம்பர்

14)காய்மணி- என்பதன் இலக்கணக்குறிப்பு

அ.பண்புத்தொகை  ஆ.வினைத்தொகை இ.இரண்டாம் வேற்றுமைத்தொகை ஈ)உவமைத்தொகை

15)தயங்கி  என்ற சொல்லின் பொருள்

அ. மெதுவாக  ஆ.வருந்தி    இ.களைத்து  ஈ.அசைந்து

பகுதி-2(மதிப்பெண்கள்:18)

                                     பிரிவு-1                                           4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:(21 கட்டாயவினா)

16)விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க:

        அ) ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா என வியக்கிறார் பாரதியார்

        ஆ)ஜெயகாந்தன் கலைப்பணி புரியவே எழுதினார்.

17)வறுமையிலும் படிப்பின்மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதை விளக்குக.

18)மருத்துவத்தில் மருந்துடன் அன்பும்,நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக

19)அவையம்- குறிப்பு வரைக.

20) உறங்குகின்ற  கும்பகன்ன எழுந்திராய் எழுந்திராய்

      கால தூதர் கையிலே உறங்குவாய் உறங்குவாய்

கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

21) ஒருவருக்கு வறுமை போன்ற துன்பத்தைத் தருவது வறுமையே ஆகும் என கூறும் குறளை எழுதுக

                                                     பிரிவு-2                                            5X2=10

ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:

22) கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.

        உழவர்கள் மலையில் உழுதனர். முல்லைப் பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்

23) சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக:-

            தேன்,விளக்கு,மழை,விண்,மணி,விலங்கு, செய்,மேகலை,வான்,பொன்,பூ

24) உறங்குவாய்-பகுபத உறுப்பிலக்கணம் தருக.

25)கலைச்சொல் தருக: ARTIFACTS, CONSONANT.

26)இருசொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:  அ) இயற்கை-செயற்கை ஆ) விதி - வீதி

27) சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க:- அ) இன்சொல்                      ஆ) எழுகதிர்

28) தராசின் இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்டு பிஸ்கட்டுகளை வையுங்கள். இரண்டு தட்டுகளும் ஈக்வலாக இருந்தா ல், கையில் மிச்சம் உள்ள பிஸ்கட்டே வெயிட் குறைவானது. பட், ஒரு பக்க தராசுத் தட்டு உயர்ந்தால் அதில் உள்ள மூன்று பிஸ்கட்களில் ஒன்று வெயிட் குறைவானது. -பிறமொழிச்சொல்லை நீக்கி எழுதுக.

பகுதி-3(மதிப்பெண்:18)

                                  பிரிவு-1                                         2X3=6

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

29)தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்-இடஞ்சுட்டி விளக்குக

30)தாவரத்தின் பிஞ்சுகளுக்கு வழங்கப்படும் சொற்களைப் பட்டியலிடுக.

31) பத்தியைப் படித்துப் பதில் தருக:-

   பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல   காலங்கள் கடந்து சென்றன.புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத்  தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக ( வெள்ளத்தில் மூழ்குதல் ) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.

1. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?

2. பெய்மழை,பெய்த மழை-இலக்கணக்குறிப்பு தருக.

3.இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?

                                                       பிரிவு-2                                        2X3=6                                                  

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய வினா)

32)மாளாத காதல் நோயாளன் போல்- என்னும் தொடரில் உள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

33) வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள்வழி விளக்குக.

34)அ.அன்னை மொழியே- எனத்தொடங்கும் பாடலை அடி மாறாமல் எழுதுக    (அல்லது)

ஆ.தூசும்-  எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக

                                                                         பிரிவு-3                                        2X3=6                                                  

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

35)அலகிட்டு வாய்பாடு எழுதுக:

          பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

            பொருளல்ல தில்லை பொருள்

36) அவந்தி நாட்டு மன்னன், மருதநாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக..

37) தீவக அணியைச் சான்றுடன் விளக்குக

பகுதி-4(மதிப்பெண்:25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:

38)அ) மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.      

                                                                  (அல்லது)

ஆ)காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

          கவிஞன் யானோர் காலக் கணிதம்

          கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!

          புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

          பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!

          இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்

          இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!

          ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்

          அவனும் யானுமே அறிந்தவை; அறிக!      - கண்ணதாசன்

39) அ.உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்துசெல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி, ஆவ செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.

                                                                   (அல்லது)

ஆ. உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலைகூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

40) அ) தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக்கொண்டிருக்கும் தம்பி; திறன்பேசியிலேயே விளையாடிக் கொண்டிருக்கும் தங்கை; காணொலி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன்; எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழி இவர்கள் எந்நேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள்! இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்படவைக்க நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பட்டியல் இடுக

                                                                 (அல்லது)

ஆ)மொழி பெயர்க்க:

      Therukoothu is, as its name indicates, a popular form of theatre performed in the streets. It is performed by rural artists. The stories are derived from epics like Ramayana, Mahabharatha and other ancient puranas. There are more songs in the play with dialogues improvised by the artists on the spot. Fifteen to twenty actors with a small orchestra forms a koothu troupe. Though the orchestra has a singer, the artists sing in their own voices. Artists dress themselves with heavy costumes and bright makeup. Koothu is very popular among rural areas.

41)அன்பழகன் மகன் முகில் என்பவர் நெய்தல் பதிப்பகத்தில் பதிப்பாசிரிரியர் பணி வேண்டி,தன் விவரப்பட்டியலுடன் விண்ணப்பிக்கிறார்.அவருக்கு உதவும் வகையில் தன்விவரப் பட்டியலை நிரப்பி உதவுக.

42)காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.



பகுதி-5 (மதிப்பெண்:24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                                   3X8=24

43)அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக                                                                                               

                                                                        (அல்லது)

ஆ)நாட்டு விழாக்கள் -விடுதலைப் போராட்ட வரலாறு -நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு- குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் ‘மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்’ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக

44)அ)அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

                                                                       (அல்லது)

 ஆ)இராமானுசர் நாடகம் என்ற பாடப்பகுதியை உரையாடல் வடிவில் சுருக்கி எழுதுக.

45)அ.உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசு பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

(அல்லது)

    ஆ.குமரிக் கடல்முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக் கொண்டு ‘சான்றோர் வளர்த்த தமிழ்’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post